நவீன குடும்ப பெண்
தொலைக்காட்சியின் மூழ்கிய
தருணங்களில் சரியாய்
கவனிக்க படாமல் விட படுகின்றன
பால்காரன் அழைப்பு மணி சத்தம்,
பள்ளி சென்று திரும்பிய குழந்தையின் பசி,
மாமனாரின் 6 மணி சிறிய தேநீர்,
கணவனின் அலுவலக
அலைச்சலின் சிறிய பரிமாற்றம்,
செல்ல பிராணியின் எஜமான் தேடல்,
மங்க தொடங்கும் சூரியனின்
செந்நிற வானம்,
புத்தகம் திறக்கும் பள்ளி குழந்தையின்
சின்ன சின்ன சந்தேகங்கள்,
தினம்தோறும் மாலையில்
வெளிவரும் சூடான செய்திகள்,
புத்தக கண்காட்சியில் புதியதாய்
வாங்கிய பிரபல எழுத்தாளரின் புத்தங்கள்,
இப்படியாய் அடுத்த தொடருக்கு
கவனமாய் அழைத்து செல்லப்படுகிறது
நவீன குடும்ப பெண்களின் நாகரீக
வாழ்க்கை...
கல்வி
கேடில் விழுச்செல்வமாம் கல்வி
நாட்டில் அனைவருக்கும் கிடைகிறதா
நாடும் வசதிக்கு ஏற்ப நால்வகை கட்டணங்கள்...
வாடும் ஏழைக்கொரு வசதியும் இங்கில்லை...
தனியார் பள்ளிகளின் தரத்திற்கு ஏற்ப
அரசுப் பள்ளிகளும் ஆகிடுமா?
காசற்ற ஏழைக்கு கல்வியில்லை என்றானால்
மாசற்ற சமுதாயம் சாத்தியமா?!...
இன்றைய தேவை....
வாழும் வழிகாட்டும் வாழ்க்கை கல்வி...
ஏழை எளியோருக்கும் உயர்தர கல்வி...
காளிதாசனுக்கு கலைமகள் அருளியது....
காசுபடைத்தோரின் கருவியாய் போனது....
காசில்லா ஏழை என்ன செய்வான்.....
சோறூட்டும் போது அன்னை சொன்னது கொஞ்சம்....
செந்தமிழை சேறாக்கும் சென்னையில் கொஞ்சம்...
அவலங்களை தாண்டி அரசிடம் கொஞ்சம்...
இலவசமாய் பெற்றிங்கே ஏழையும் கற்றான்....
என்மொழியில் நான் கற்க கட்டணமா....?!- இந்நிலையை
செம்மொழி மாநாடு மாற்றிடுமா....?!
கட்டணங்கள் இனி கழிப்பிடத்தோடு போகட்டும்.....
கல்விக்கும் ஏனோ....?!
நாட்டில் அனைவருக்கும் கிடைகிறதா
நாடும் வசதிக்கு ஏற்ப நால்வகை கட்டணங்கள்...
வாடும் ஏழைக்கொரு வசதியும் இங்கில்லை...
தனியார் பள்ளிகளின் தரத்திற்கு ஏற்ப
அரசுப் பள்ளிகளும் ஆகிடுமா?
காசற்ற ஏழைக்கு கல்வியில்லை என்றானால்
மாசற்ற சமுதாயம் சாத்தியமா?!...
இன்றைய தேவை....
வாழும் வழிகாட்டும் வாழ்க்கை கல்வி...
ஏழை எளியோருக்கும் உயர்தர கல்வி...
காளிதாசனுக்கு கலைமகள் அருளியது....
காசுபடைத்தோரின் கருவியாய் போனது....
காசில்லா ஏழை என்ன செய்வான்.....
சோறூட்டும் போது அன்னை சொன்னது கொஞ்சம்....
செந்தமிழை சேறாக்கும் சென்னையில் கொஞ்சம்...
அவலங்களை தாண்டி அரசிடம் கொஞ்சம்...
இலவசமாய் பெற்றிங்கே ஏழையும் கற்றான்....
என்மொழியில் நான் கற்க கட்டணமா....?!- இந்நிலையை
செம்மொழி மாநாடு மாற்றிடுமா....?!
கட்டணங்கள் இனி கழிப்பிடத்தோடு போகட்டும்.....
கல்விக்கும் ஏனோ....?!
வரதட்சணை
குழந்தையாக இருக்கும் போது பள்ளிக்கூடம்,
பெரியவர்களாக ஆனா பிறகு காலிக்குடம்.
வரதட்சணையாய் கேட்பது வெள்ளிக்குடம்,
தரமுடியாமல் தவிக்கும் எங்கள் குடும்பக்கூடம்.
படிப்பதற்கும் கொடுக்க வேண்டும் தட்சணை,
பதிக்கும் கொடுக்க வேண்டும் வரதட்சணை.
படிப்பை வைத்து கேட்கும் அளவு,
சலுகை செய்யும் உறவு.
விபச்சாரத்தை விட கொடிது வரதட்சணை,
பெண் ஜென்மத்தை ஆட்டி வைக்கும் பிரச்சினை.
மாட்டுச் சந்தையிலும் நடக்காத கொடுரம்,
மணப்பந்தலில் நடத்தப்படும் அவலம்.
பங்குச் சந்தையாய் ஆன கல்யாணம்,
பாசம் இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம்.
வரதட்சணைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
வரும் மகாலட்சுமியை வரவேற்போம்!
பெரியவர்களாக ஆனா பிறகு காலிக்குடம்.
வரதட்சணையாய் கேட்பது வெள்ளிக்குடம்,
தரமுடியாமல் தவிக்கும் எங்கள் குடும்பக்கூடம்.
படிப்பதற்கும் கொடுக்க வேண்டும் தட்சணை,
பதிக்கும் கொடுக்க வேண்டும் வரதட்சணை.
படிப்பை வைத்து கேட்கும் அளவு,
சலுகை செய்யும் உறவு.
விபச்சாரத்தை விட கொடிது வரதட்சணை,
பெண் ஜென்மத்தை ஆட்டி வைக்கும் பிரச்சினை.
மாட்டுச் சந்தையிலும் நடக்காத கொடுரம்,
மணப்பந்தலில் நடத்தப்படும் அவலம்.
பங்குச் சந்தையாய் ஆன கல்யாணம்,
பாசம் இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம்.
வரதட்சணைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
வரும் மகாலட்சுமியை வரவேற்போம்!
மனம்
பிள்ளைகள் படிக்கவில்லை என்றால்
நான் கற்பிப்பதில் குறை என்கிறாய்
வேலையாட்கள் பணிபுரியவில்லை என்றால்
நான் கண்காணிப்பதில் குறை என்கிறாய்
தொழிலில் நீ தோல்வியுற்றால்
என் ஆலோசனையில் தவறென்று சொல்கிறாய்
குடும்பத்தில் பிரச்சினை எனில்
என் கட்டுகோப்பில் குறை என்கிறாய்
என் சமையல் ருசிக்கவில்லையெனில்
என் கவனத்தில் குறை என்கிறாய்
எவ்வளவு குறைகள் நீ கூறினாலும்
உன் விஷயத்தில் நிறை தான் எனக்கு
நீ என்பதே எதுவுமில்லை
நான் தான் உனக்கு எல்லாமே என்று....
நான் கற்பிப்பதில் குறை என்கிறாய்
வேலையாட்கள் பணிபுரியவில்லை என்றால்
நான் கண்காணிப்பதில் குறை என்கிறாய்
தொழிலில் நீ தோல்வியுற்றால்
என் ஆலோசனையில் தவறென்று சொல்கிறாய்
குடும்பத்தில் பிரச்சினை எனில்
என் கட்டுகோப்பில் குறை என்கிறாய்
என் சமையல் ருசிக்கவில்லையெனில்
என் கவனத்தில் குறை என்கிறாய்
எவ்வளவு குறைகள் நீ கூறினாலும்
உன் விஷயத்தில் நிறை தான் எனக்கு
நீ என்பதே எதுவுமில்லை
நான் தான் உனக்கு எல்லாமே என்று....
சுருங்கிய உலகம்
இந்த உலகத்தையே
உங்கள் கண்முன்
கொண்டு வந்துக்
காட்டுகிறேன் என்று
மகள் கூற
தந்தை கேட்டார்....
அதற்கு இப்போது
என்ன வேண்டும்
சொல் நீ..
மகள் கேட்டாள்
ஒரு மடி கணினி !!!
உங்கள் கண்முன்
கொண்டு வந்துக்
காட்டுகிறேன் என்று
மகள் கூற
தந்தை கேட்டார்....
அதற்கு இப்போது
என்ன வேண்டும்
சொல் நீ..
மகள் கேட்டாள்
ஒரு மடி கணினி !!!
ஜப்பானியர்கள் வைர நெஞ்சம் பெற்றவர்கள்
அணுகுண்டு போட்டார்கள்
புல் பூண்டு கருகியது
உயிர்கள் ஒழிந்தது
உயரம் குறைந்தது
உழைத்தார்கள் ஓய்வின்றி
உழைத்தார்கள்
உலகின் உச்சம்
தொட்டார்கள்.
சுனாமி வந்தது
சும்மா புரட்டிப் போட்டது
அணு உலை வெடித்தது
ஆருயிர்கள் மடிந்தது
உழைப்பார்கள் ஓய்வின்றி
உழைப்பார்கள்
உலகின் உச்சம்
மீண்டும் தொடுவார்கள்.
விதியை நினைத்து
வீழ்ந்து கிடக்க மாட்டார்கள்
மதியைப் பயன்படுத்தி
மற்றட்ட வளர்ச்சிக் காண்பார்கள்
தோல்விக்குத் துவளாத
வைர நெஞ்சம் பெற்றவர்கள்
சோகத்திற்குச் சோர்ந்திடாத
இதயம் படைத்தவர்கள்
புல் பூண்டு கருகியது
உயிர்கள் ஒழிந்தது
உயரம் குறைந்தது
உழைத்தார்கள் ஓய்வின்றி
உழைத்தார்கள்
உலகின் உச்சம்
தொட்டார்கள்.
சுனாமி வந்தது
சும்மா புரட்டிப் போட்டது
அணு உலை வெடித்தது
ஆருயிர்கள் மடிந்தது
உழைப்பார்கள் ஓய்வின்றி
உழைப்பார்கள்
உலகின் உச்சம்
மீண்டும் தொடுவார்கள்.
விதியை நினைத்து
வீழ்ந்து கிடக்க மாட்டார்கள்
மதியைப் பயன்படுத்தி
மற்றட்ட வளர்ச்சிக் காண்பார்கள்
தோல்விக்குத் துவளாத
வைர நெஞ்சம் பெற்றவர்கள்
சோகத்திற்குச் சோர்ந்திடாத
இதயம் படைத்தவர்கள்
பஞ்ச பூதங்கள்.....!
வானம் எனும் பூதம்
அமைதியாய் பார்த்துக் கொண்டிருக்க
நிலம் எனும் பூதம்
சற்றே சோம்பல் முறிக்க
நீர் எனும் பூதம்
ஊர் வழி ஓடி
தீ எனும் பூதம்
கிடைத்ததை எரித்துத் தள்ள
காற்று எனும் பூதம்
விரைவில் செய்தியைப் பரப்ப...
ஜப்பான் படும் பாட்டைக்
கண்கூடாகக் காணும் பொழுது
இயற்கையின் ஐந்து கூறுகளை
உணர்ந்து நம் முன்னோர்கள்
பஞ்சபூதம் என்று அழைத்ததன்
காரணம் புரிந்தது தெளிவாக!
அமைதியாய் பார்த்துக் கொண்டிருக்க
நிலம் எனும் பூதம்
சற்றே சோம்பல் முறிக்க
நீர் எனும் பூதம்
ஊர் வழி ஓடி
தீ எனும் பூதம்
கிடைத்ததை எரித்துத் தள்ள
காற்று எனும் பூதம்
விரைவில் செய்தியைப் பரப்ப...
ஜப்பான் படும் பாட்டைக்
கண்கூடாகக் காணும் பொழுது
இயற்கையின் ஐந்து கூறுகளை
உணர்ந்து நம் முன்னோர்கள்
பஞ்சபூதம் என்று அழைத்ததன்
காரணம் புரிந்தது தெளிவாக!