நியூ மீடியா

லிங்க்ட்இன்

சமூக வலையமைப்புக்களில் லிங்க்ட்இன் கொஞ்சம் வித்தியாசமானது. மற்றவலையமைப்புக்கள் எல்லாம் நட்பு, கலாட்டா என சுவாரஸ்யமாய் இருக்க இந்தத் தளம் கொஞ்சம் பிஸ்னெஸ் தேவைகளை முன்னிறுத்தி இயங்குகின்றது. ரொய்ட் ஹாஃப்மேன் என்பவர்தான் இந்த தளத்தை உருவாக்கியவர்.

இதில் இணைகின்ற நபர்கள் தங்களுக்குத் தெரிந்த நம்பிக்கைக்குரிய, வேலையில் கெட்டிக்காரர்களை இணைத்துக் கொள்கின்றார்கள். படிப்பு, அனுபவம், தகுதி போன்ற விஷயங்கள் இங்கே கவனிக்கப்படுகின்றது.

இதிலுள்ள பயன் பாட்டாளர்கள் பிரபல நிறுவனங்களுடனும் இணைய இணைப்பு உருவாக்கிக் கொள்ள முடியும். இதனால் அந்த நிறுவனங்களில் ஆட்கள் தேவைப்படும் போதேல்லாம் தகவல் நமது தளத்திலும் வந்து விழுகின்றது.அமெரிக்காவில் மிகப்பிரபல்யமாக இருக்கும் இந்த வலை அமைப்பிலுள்ள திறமைசாலிகளுக்கு ஏகப்பட்ட வேலை வாய்ப்புக்கள் தானாகவே வந்து சேர்கின்றன. சுமார் 20 மில்லியன் லாபக் கணக்குடனும் 75 மில்லியன் உறுப்பினர்களுடனும் வலுவாகப் பயணிக்கின்றது லிங்க்ட்இன்.

http://www.linkedin.com/ என்ற லிங்கினூடாக இந்த தளம் சென்று ஓர் உறுப்பினராகுங்கள்
ஹெச்.ரி.எம்.எல்.-5 (HTML-5)

ஹைப்பர் ரெக்ஸ் மார்க்கப் லாங்குவேஜ் (Hyper Text Markup Language) என்பதன் சுருக்கம் தான் HTML. எண் 5 என்பது அதன் ஐந்தாவது முக்கிய பதிப்பு என்பதைக் குறிக்கின்றது. இணையத்தளத்தில் பக்கங்களை வடிவமைக்கப்படும் கணனி மொழிதான் ஹெச்.ரி .எம்.எல்.

Tim Berners Lee என்பவர் தான் இந்த மொழியை வடிவமைத்தவர். இவர் உருவாக்கிய ENQUIRE எனும் கணனிமொழிதான் இதன் அடிப்படை. அது பின்னர் ஹெச்.ரி.எம்.எல். ஆனது. அதன் ஐந்தாம் முக்கியமான பதிப்பு இப்போது உருவாகன்கப்பட்டு வருகின்றது. பழைய பதிப்புக்களில் இல்லாத சில அம்சங்களை இதில் சேர்த்திருக்கின்றார்கள் என்பதுதான் இதன் சிறப்பைக் கூட்டுகின்றது.

குறிப்பாக வீடியோக்களை இயக்குவது, drag and drop எனப்படும் இணையப்பக்கத்தில் உள்ளவற்றை மாற்றி வடிவமைக்கும் வசதி போன்றவற்றை இந்தப் பதிப்புக் கொண்டிருக்கின்றது. இதனால் இனிமேல் இணையப்பக்கத்தை இணைக்கும் போது வேறு எந்த கூடுதல் மென்பொருட்களின் (add ens) தேவையும் இல்லாமல் இந்த ஹெச்.ரி .எம்.எல். எல்லாவற்றையும் காட்டிவிடும் என்பது சிறப்பம்சம்.

கூகுள் வடிவத்தில் லோகோ உருவாக்க

இணையம் என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது கூகுள் தான். கூகுள் ஸ்டைலில் நமக்கு வேண்டிய பெயரை உருவாக்கலாம். இதற்காக போட்டோஷோப் போன்ற எடிட் மென்பொருட்கள் தெரிய வேண்டுமென்ற அவசியம் இல்லை. மற்றும் இதை செய்ய வெறும் இரண்டு நிமிடங்களே அதிகம். இது போல் நமக்கு தேவையான பெயரையும் உருவாக்கி கொள்ளலாம்.

இந்த பணியை சுலபமாக செய்ய ஒரு தளம் உள்ளது. www.goglogo.com/இந்த லின்கினூடாக தளம் செல்லவும். இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

ENTER YOUR NAME என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான பெயரை கொடுத்து விடவும்.அடுத்து அருகில் உள்ள Create My Search Page என்ற பட்டனை அழுத்தவும். அடுத்து உங்களுக்கு வரும் பக்கத்தில் நீங்கள் கொடுத்த பெயர் கூகுள் ஸ்டைலில் வந்திருக்கும்.


இது போன்று நீங்கள் கொடுத்த பெயர் கூகுள் ஸ்டைலில் வந்திருக்கும். அதன் மீது மவுசில் வலது க்ளிக் செய்து SAVE IMAGE AS என்பதை தேர்வு செய்து உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்.இதில் நீங்கள் சேமிக்கும் பொது ஒவ்வொரு எழுத்தாக தான் சேமிக்க முடியும்.